Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 11 January 2025
webdunia

சூர்யாவின் கங்குவா பட லேட்டஸ்ட் அப்டேட்!

Advertiesment
சூர்யாவின் கங்குவா பட லேட்டஸ்ட் அப்டேட்!
, ஞாயிறு, 25 ஜூன் 2023 (12:34 IST)
சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் அரச காலத்து கதை என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை திஷா பதானி நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் யோகி பாபு மற்றும் கோவை சரளா உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கின்றனர். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது, சூர்யா நடிக்கும் முதல் 3டி தொழில்நுட்ப படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பாதி காட்சிகளை இயக்குனர் சிவா படமாக்கி முடித்துள்ளார். இந்நிலையில் மீதமுள்ள காட்சிகளை படமாக்க வேண்டிய பணிகளை இப்போது படக்குழு மேற்கொண்டு வருகிறது. சூர்யாவுக்கு இன்னும் படத்தில் 45 நாட்கள் நடிக்கவேண்டிய காட்சிகள் உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த கட்ட ஷூட்டிங் கொடைக்கானலில் 20 நாட்கள் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாயகன் மீண்டும் வறார்..! வெளியானது Project K சர்ப்ரைஸ் வீடியோ!