விமர்சகர்கள், மீடியா, மக்கள்....அனைவர் மனதையும் கொள்ளையடித்த “சில்லுக்கருப்பட்டி” !

Webdunia
சனி, 28 டிசம்பர் 2019 (19:04 IST)
நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் ரசிகர்களிடம் சிவப்பு கம்பள வரவேற்பு பெற்று  வருவது குறிப்பிடதக்கது. 2019 வருடம் அப்படி நிறைய நல்ல கதையம்சம் உள்ள படங்களை தந்துள்ளது. முத்தாய்ப்பாக இந்த வருடத்தின் இறுதியில் இயக்குனர் ஹலிதா சமீமின் “சில்லுக்கருப்பட்டி” ஒரு சிறந்த படமாக அருமையான கதையம்சம் கொண்ட படமாக அமைந்துள்ளது.
 
கதா பாத்திரத்தை உருவாக்கியிருக்கும் விதத்திலும்  இயல்பை மீறாத நேர்த்தியான படைப்பாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். இப்படத்தின் நான்கு காதல் கதைகளும் நான்கு விதமாக, நகரின் முடுக்குகளில் வாழும் மனிதர்களின் உறவை, அன்பின் அவசியத்தை பேசுவதாக அமைந்திருக்கிறது.
 
“ஹே அம்மு“ நகரின் அடுக்கு மாடியில் வாழும் தம்பதியின் உறவை சொல்கிறது. பணியில் பரபரப்பாக இருக்கும் கணவன்( சமுத்திர்கனி) வீட்டில் தனிமையில் உழழும் மனைவி ( சுனைனா) இருவரின் இடையேயான உறவுச் சிக்கலை அவர்களின் அன்பு வெளிப்படுவதை அழகான கதையாக சொல்கிறது. “பிங்க் பேக்” சமூகத்தின் இருவேறு அடுக்கில் வாழும் வளர் இளம் சிறுவர்களிடையே உருவாகும் அன்பை அழகாக சொல்கிறது. இன்னொருபுறம் “காக்கா கடி” எனும் கதையில் மீம் கிரியேட்டர் ஒருவனுக்கும் (மணிகண்டன்) உடை வடிவமைக்கும் மாடர்ன் பெண்ணுக்கும் (நிவேதிதா சதீஸ்) இடையே நிகழும் காதலை அழகான தருணங்களை சொல்கிறது. “டர்டிள் வாக்” எனும் கதை முதிய வயதில் இருக்கும் இருவருக்குள் ( ஶ்ரீராம் , லீலா சாம்சன் ) ஏற்படும் உறவை சொல்கிறது.
 
இப்படி வாழ்வின் இயல்பை மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் இப்படைப்பு வெகு அற்புதமான தொழில்நுட்ப கலைஞர்களால் மாயாஜாலத்தை திரையில் நிகழ்த்தியிருக்கிறது. அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்தி, யாமினி ஞானமூர்த்தி ஆகிய நான்கு கலைஞர்களின் ஒளிப்பதிவும் பிரதீப் குமாரின்  அற்புத இசையும் படத்தை ஒரு பேரனுபவமாக மாற்றியிருக்கிறது. உலக ரசிகர்கள் அனைவரையும் சில்லுக்கருப்பட்டி படத்தை தமிழ் சினிமா கொண்டாடி வருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments