Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"சில்லுக் கருப்பட்டி" படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் பதிவு - செம கடுப்பில் ரசிகர்கள்!

, சனி, 28 டிசம்பர் 2019 (11:42 IST)
‘பூவரசம் பீப்பீ’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர், இயக்குநர் ஹலிதா ஷமீம். அந்த படத்தை தொடர்ந்து ‘சில்லுகருப்பட்டி’ என்ற அந்தாலஜி ஸ்டைல் படத்தை இயக்கியிருந்தார். நேற்று வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வசூலில் சாதனை படைத்தது வருகிறது. 
 
இப்படத்தில் நடிகர் சமுத்திரகனி மற்றும் சுனைனா நடித்திருந்தனர். இவர்களுடன் சாரா அர்ஜுன், நிவேதிதா சதீஷ், மணிகண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா, அபிநந்தன் ராமானுஜன், யாமினி மூர்த்தி, விஜய் கார்த்திக் என திறமை மிக்க நான்கு ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றியுள்ள இப்படம்  நான்கு விதமான காதல் கதைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.  இப்படம் சென்னை இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் சிறந்த படங்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தை குறித்து இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ட்விட்டரில் " #சில்லு கருப்பட்டி படம் அற்புதமாக இருப்பதாக கேள்விப்படுகிறேன், வாழ்த்துகள்" என கூறி கருத்து பதிவிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் " ஓ...அப்போ நீங்க இன்னும் படம் பாக்கல...? இந்த மாதிரி நல்ல படத்தையெல்லாம் பார்க்காதீங்க என்று சிலரும், ஒரு சிலர் " ஆமாம் கதையை யாரிடம் இருந்தும் திருடாமல் எடுத்து இருக்காங்க" என கோபமாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ட்ரடீஷ்னல் உடையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்திய பூஜா ஹெக்டே!