Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

96 படம் தெலுங்கில் ஓடாதுன்னு எனக்குத் தெரியும்… இயக்குனர் பிரேம்குமார்!

96 படம் தெலுங்கில் ஓடாதுன்னு எனக்குத் தெரியும்… இயக்குனர் பிரேம்குமார்!

vinoth

, வியாழன், 18 ஜூலை 2024 (13:58 IST)
96 என்ற வெற்றிப்ப்டம் கொடுத்த இயக்குனர் பிரேம் குமார், தற்போது கார்த்தி நடிப்பில் மெய்யழகன் என்ற படத்தை இயக்க சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் அதை தயாரிக்கிறது. கிராமத்து பின்னணியில்  உருவாகும் உருவாகும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அரவிந்த்சாமி நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 27 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் பிரேம்குமார் அளித்துள்ள நேர்காணலில் பல சுவாரஸ்யமான சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில் அவர் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான 96 படம் தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் ஆன போது ஏன் ஹிட்டாகவில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ளார். அதில் “ 96 படத்தை ரீமேக் பண்ணலாம் என்ற பேச்சுவார்த்தை தொடங்கிய போதே அதை பண்ணவேண்டாம் என சமந்தா கூறினார். ஆனால் பின்னர் அவரே அதில் நடிக்க வேண்டிய சூழல் வந்தது. அந்த படம் எடுக்கும் போதே இது ஓடாது என தெரிந்துவிட்டது. ஏனென்றால் தென்னிந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் அந்த படத்தைப் பார்த்துவிட்டார்கள்.” எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'மனோதரங்கல்' மலையாள ஆந்தாலஜி தொடரின் முன்னோட்டம் வெளியீடு!