Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மணமான பெண்கள் தலை முன்வகிட்டில் குங்குமம் வைப்பது ஏன்?

மணமான பெண்கள் தலை முன்வகிட்டில் குங்குமம் வைப்பது ஏன்?
, செவ்வாய், 2 ஜனவரி 2024 (18:40 IST)
பொதுவாக மணமான பெண்கள் மட்டும் இன்றி திருமணம் ஆகாத பெண்கள் கூட நெற்றியில் குங்குமம் வைப்பது சாதாரணமான ஒன்றுதான். ஆனால் திருமணம் ஆன பெண்கள் மட்டுமே தலையின் முன்வகிட்டில்  குங்குமம் வைப்பார்கள். திருமணமான தினத்தில் கணவர் தலையின் முன்வகிட்டில் வைத்துவிடும் இந்த குங்குமத்தை தினசரி பெண்கள் வைத்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. இதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம். 
 
தலையின் முன்வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. அதனால்தான் வீட்டுக்கு வந்த மணப்பெண்ணை மகாலட்சுமி போல் கருதி திருமணமான பெண்களுக்கு முன்வகிட்டில்  குங்குமம் வைக்கப்படுகிறது. 
 
அது மட்டும் இன்றி நெற்றியின் இரண்டு புருவங்களுக்கு இடையில் ஆக்ஞா சக்கரம் உள்ளது. ஆத்ம சக்தி பிரம்மத்தை அடைய நெற்றியின் புருவ மத்தியில் குங்குமம் இட வேண்டும்.என்பது பெரியோர்களின் அறிவுரையாக உள்ளது.  
 
ஆக்ஞா சக்கரம் உள்ள இடத்தில் குங்குமம் வைப்பது, மகாலட்சுமி வாசம் செய்யும் இடத்தில் குங்குமம் வைப்பது ஆகிய இரண்டுமே மணமான பெண்களுக்கு  அழகை மேலும் அழகாக்கும் என்று நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூர நட்சத்திரத்தில் வரும் சஷ்டியின் விஷேசம் என்ன தெரியுமா?