கோட் படத்தில் கேப்டன் காட்சிகள் பிரம்மாண்டமா வந்துருக்குன்னு விஜய் சொன்னார் – பிரேமலதா பேட்டி!

vinoth
சனி, 24 ஆகஸ்ட் 2024 (13:46 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் GOAT திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் தற்போது விறுவிறுப்பாக கிராபிக்ஸ் பணிகள் உட்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலமாக மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை உறுதிப்படுத்துவது போல சமீபத்தில் கோட் படக்குழுவினர் விஜயகாந்த் குடும்பத்தினரை சென்று சந்தித்தனர்.

இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து பேசியுள்ள பிரேமலதா விஜயகாந்த் “விஜய் எங்கள் வீட்டில் ஒரு பிள்ளை போல். அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்துள்ளார். என் மகன் சண்முக பாண்டியன் ‘நீங்கள்தான் அண்ணா எனக்கு சினிமாவில் முன்னுதாரணம்” எனக் கூறினார். விஜய் என் மூத்த மகனிடம் “அரசியலில் நீதான் எனக்கு சீனியர். நீ நன்றாக பேசுகிறாய். மீடியாவை சிறப்பாக எதிர்கொள்கிறாய்” என்று பாராட்டினார். என்னிடம் கேப்டன் சம்மந்தப்பட்ட காட்சிகள் பிரம்மாண்டமா வந்திருக்குமா என்றார்” என சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments