Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வழியாக ஹிட் இயக்குனரோடு ஜோடி சேர்ந்த விஜய் சேதுபதி!

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (10:02 IST)
96 படத்தின் மூலம் வெற்றி கொடுத்த விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் பிரேம் குமார் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது.

கடந்த 2018  ஆம் ஆண்டு வெளியான விஜய் சேதுபதியின் படங்களில் அதிக வரவேற்பைப் பெற்ற படமென்றால் அது 96 தான். ரிலிஸுக்கு முன்னர் பல சிக்கல்களைக் கடந்து திரையரங்குகளுக்கு வந்த 96 படம், ரிலிசுக்குப் பின் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றது. காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட படமான 96 படம் வழக்கம்போல இளைஞர்களை மட்டும் கவராமல் கல்யாணம் ஆகி தனது மத்திய வயதுகளில் இருக்கும் 70ஸ் மற்றும் 80ஸ் கிட்ஸ்களையும் கவர்ந்ததால் தியேட்டர்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே இருக்க தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த கூட்டணி இப்போது மீண்டும் இணைய உள்ளது. விரைவில் விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தை இயக்க உள்ளார் பிரேம் குமார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரே வாரத்தில் ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூல்.. ’கோட்’ வசூலை முறியடிக்குமா தேவாரா?

பிக்பாஸ் சம்யுக்தா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் "மெட்ராஸ் மாஃபியா கம்பெனி"

ஆலியா பட் மற்றும் ஷர்வரி இணைந்து நடித்துள்ள 'ஆல்பா' திரைப்படம்!!

"அப்பு VI STD" திரை விமர்சனம்!

ரசிகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் நன்றி சொன்ன ரஜினிகாந்த்: வைரல் பதிவுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments