Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்னேகா பிறந்தநாளுக்கு வேற லெவல் சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்!

ஸ்னேகா பிறந்தநாளுக்கு வேற லெவல் சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்!
, திங்கள், 12 அக்டோபர் 2020 (18:35 IST)
தென்னிந்திய சினிமாவின் சிரிப்பழகி சினேகா கடந்த 2001 ம் ஆண்டு வெளியான "என்னவளே" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். வசீகரா, ஆட்டோ கிராப் , பார்த்தாலே பரவசம், ஏப்ரல் மாதத்தில் , உன்னை நினைத்து , ஹரிதாஸ் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தார். தமிழ் தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக பேசப்பட்டார்.

இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து 2012ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 2015ல் இவர்களுக்கு பிரசன்னா விஹான் என்ற மகன் பிறந்தார். பின்னர் குழந்தைக்காக சிறிது காலம் சினிமாவில் ஒதுங்கியிருந்த சினேகா பின்னர் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அதைடுத்து கடந்த ஜனவரி 24 ஆம் தேதி சினேகாவுக்கு இரண்டாவதாக ஆத்யந்தா என்ற பெண் குழந்தை குழந்தை பிறந்தது.

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடடும் ஸ்னேகாவிற்கு கணவர் பிரசன்னா செம சர்ப்ரைஸ் கொடுத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு, "ஆண்டுகள் வேகமாக ஓடக்கூடும், ஆனால் நாம் சந்தித்த தருணத்தில் என் உலகம் இன்னும் சிக்கிக்கொண்டது. இதுவரை எதுவும் விலைமதிப்பற்றதாக இல்லை.

இந்த ஆண்டுகளில் நான் உனக்கு சொன்ன அனைத்தும் உன்னிடம் என் அன்பின் கடலில் ஒரு துளி கூட இல்லை. என் ஆத்மாவின் ஒவ்வொரு துளிகளிலும் நீ தான். எனது குறைபாடுகள் மற்றும் தந்திரங்களை சமாளித்ததற்காக உனக்கு நன்றி செலுத்துகிறேன், ஆனால் அதிசயமாக அன்பாக இரு. நீ என் மூச்சு! நீ விரும்பும் அனைத்தையும் கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கன்னம்மா என அழகான கேப்ஷன் கொடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாக்க பச்ச புள்ள மாதிரி இருந்துகிட்டு.. என்ன வேல பண்ற! – கமல் வெளியிட்ட அக்‌ஷரா பட ட்ரெய்லர்!