தமிழில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சகுனி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். அதையடுத்து சூர்யாவுடன் மாசு , ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மாடல் துறையில் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கியுள்ளார்.
தெலுங்கு , கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்திருந்தாலும் அவரால் பெரிதாக வளரமுடியவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தனக்கு கைவந்த கலைகள் அத்தனையும் முயற்சித்து பார்த்து வருகிறார். அந்தவகையில் தற்போது குட்டை பாவாடையில் யோகா செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் தட்டிவிட்டிருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் பார்வையை ஈர்த்துள்ளது. இதன் மூலமாவது அம்மணிக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்குமா என பார்ப்போம்.