Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தனுஷ் படத்தில் பிரகாஷ்ராஜ்

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தனுஷ் படத்தில் பிரகாஷ்ராஜ்
, வியாழன், 29 ஜூலை 2021 (10:23 IST)
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்க உள்ள படத்தில் பிரகாஷ் ராஜ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

நடிகர் தனுஷ் கைவசம் இப்போது ஏகப்பட்ட படங்கள் உள்ளன. இதனால் தனது தேதிகளை எல்லாப் படங்களுக்கு பிச்சி பிச்சி கொடுத்து வருகிறார். இதையடுத்து அடுத்த மாதம் அவர் கதை எழுதி இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இதில் இயக்குனர் பாரதி ராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடிக்கின்றனர். திருவிளையாடல் ஆரம்பம் மற்றும் வேங்கை படத்துக்குப் பின்னர் பிரகாஷ்ராஜ் தனுஷ் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா குமார் படத்தைக் கைப்பற்றிய ஐசரி கணேஷ்!