Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா குமார் படத்தைக் கைப்பற்றிய ஐசரி கணேஷ்!

கொரோனா குமார் படத்தைக் கைப்பற்றிய ஐசரி கணேஷ்!
, வியாழன், 29 ஜூலை 2021 (10:18 IST)
கொரோனா குமார் படத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய் சேதுபதி நடித்த ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ஜூங்கா ஆகிய படங்களையும் கார்த்தி நடித்த ’காஷ்மோரா’ படத்தையும் இயக்கியவர் இயக்குனர் கோகுல். இவர் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதற்குக் காரணம் அந்த படத்தின் டைட்டில்தான். ’கொரோனா குமார்’. என்று அறிவிக்கப்பட்ட  படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை விஜய் சேதுபதியே நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் அதன் பின்னர் சந்தானம் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது இயக்குனர் கோகுல் சிம்புவை வைத்து சத்தம் இல்லாமல் அந்த படத்தை தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை மிகவும் ரகசியமாகப் படக்குழு வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் தயாரிப்பை இப்போது ஐசரி கணேஷ் கைப்பற்றியுள்ளாராம். விறுவிறுப்பாக இப்போது படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ராஷி கண்ணா!