பிரதீப் ரங்கநாதன் இத்தனைக் கோடி சம்பளம் கேட்கிறாரா?

vinoth
வெள்ளி, 17 ஜனவரி 2025 (14:39 IST)
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இதன் மூலம் ப்ரதீப் ரங்கநாதன் கவனிக்கப்படும் ஹீரோவானார்.

இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘டிராகன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் அவரை நோக்கி அடுத்தடுத்து தயாரிப்பாளர்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அவர் தன்னுடைய சம்பளத்தை 18 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளாராம். இதுவரை நடிகராக ஒரு ஹிட் மட்டுமே கொடுத்துவிட்டு முன்னணி நடிகர்கள் பலரின் சம்பளத்தை விட அதிகமாக வாங்குகிறார் என்பது கோலிவுட்டில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments