Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வனிதா தாக்கப்பட்டது குறித்து பதிவிட்டு உடனே நீக்கிய ப்ரதீப் ஆண்டனி!

Advertiesment
வனிதா தாக்கப்பட்டது குறித்து பதிவிட்டு உடனே நீக்கிய ப்ரதீப் ஆண்டனி!
, திங்கள், 27 நவம்பர் 2023 (06:57 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள தனது மகள் ஜோவிகாவுக்கு ஆதரவாக தொடர்ந்து சமூகவலைதளங்களில் பேசி வருகிறார் நடிகை வனிதா விஜயகுமார். இந்நிலையில் வனிதா நேற்று முன்தினம் நள்ளிரவில் தனது காரில் வீட்டின் முன் இறங்கிய போது திடீரென அவர் முன் தோன்றிய மர்ம நபர்கள் அவரது முகத்தில் தாக்கியதாகவும் ரெட்கார்ட் கொடுப்பியா என்று இளக்காரமாக சிரித்ததாகவும் வனிதா தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

அந்த நபர்களின் முகங்களை பார்க்க முடியவில்லை என்றாலும் அவர்கள் சிரித்த சிரிப்பு தனக்கு பயத்தை காட்டியதாகவும் தான் வலியால் துடித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக தனது சகோதரியை வரவழைத்து அவரது வீட்டில் முதலுதவி எடுத்துக் கொண்டதாகவும் அதன் பின்னர் தன்னுடைய வீட்டுக்கு சென்றதாகவும் வனிதா தெரிவித்துள்ளார்.  மேலும் அவர்கள் பிக்பாஸ் போட்டியாளரான பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளராக இருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ப்ரதீப் ஒரு பதிவை பதிவிட்டு அதை பின்னர் நீக்கியுள்ளார். அவரது பதிவில் “ நான் உண்மையிலேயே எனது போட்டியாளர்களுக்கோ அல்லது யாருக்குமோ எதிராக இல்லை.  வனிதா-உங்களுக்கு என்ன நடந்தது என தெரியவில்லை.  உங்களுக்காக நான் வருந்துகிறேன்.  ஓய்வு எடுங்கள். உங்கள் மகள் ஜோவிகா புத்திசாலி. அவரால் வெல்ல முடியும். அவருக்கு உங்கள் உதவி தேவையில்லை” எனக் கூறப்பட்டு இருந்தது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமீர் பிரச்சனையில் சுதா கொங்கராவைக் கோர்த்துவிட்ட ஞானவேல் ராஜா.. பதறியடித்து விளக்கம்!