Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விசித்ரா விஷயத்தில் கமல் நியாயமாக நடந்து கொள்வாரா? ரசிகர்கள் விவாதம்!

Advertiesment
விசித்ரா விஷயத்தில் கமல் நியாயமாக நடந்து கொள்வாரா? ரசிகர்கள் விவாதம்!
, வியாழன், 23 நவம்பர் 2023 (11:51 IST)
தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் கவர்ச்சி நடிகையாக நடித்து பிரபலம் ஆனவர் விசித்ரா. ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகிய அவர் இப்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீண்டும் புகழ் வெளிச்சத்துக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு சினிமா உலகில் நடந்த பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார். அதில் “நான் 20 வருடங்களுக்கு முன்னர் நடித்த ஒரு தெலுங்கு படத்தில், அந்த படத்தின் ஹீரோ என்னை அவரின் ரூமுக்கு அழைத்தார். ஆனால் நான் செல்லவில்லை. இதுபற்றி பேசும்போது அடுத்த நாள் அந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் என்னைக் கண்ணத்தில் அறைந்துவிட்டார். அதனால்தான் நான் சினிமாவை விட்டு விலகினேன்” எனக் கூறியிருந்தார்.

இது சம்மந்தமான வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் தெலுங்கு ரசிகர்கள் ‘விசித்ரா குறிப்பிடும் அந்த நடிகர் தெலுங்கு முன்னணி நடிகரான பாலகிருஷ்ணாதான் என்றும் அந்த ஸ்டண்ட் மாஸ்டர் விஜய்தான் என்றும் கருத்து தெரிவித்து விவாதித்து வருகின்றனர். 2001 ஆம் ஆண்டு பலேவிடி பசு படத்தில் பாலய்யாவோடு விசித்ரா இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விசித்ரா பாதிக்கப்பட்ட சம்பவம் இப்போது பரவலாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் விவாதப் பொருளாக ஆகியுள்ள நிலையில் இந்த வார இறுதியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல், இந்த விஷயத்தை எப்படிக் கையாளப் போகிறார் என்பதைக் காண ரசிகர்கள் எதிர்பார்ப்போடு உள்ளனர்.

ஏனென்றால் விசித்ராவுக்கு தொல்லை கொடுத்ததாக சொல்லப்படும் நடிகர் பாலகிருஷ்ணா தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகரும் மற்றும் கமல்ஹாசனின் நீண்டநாள் நண்பரும் ஆவார். இதனால் விசித்ரா சொன்ன சம்பவத்தைப் பற்றி கமல் பேசுவாரா அல்லது அதைப் பற்றி பேசாமல் கடந்து சென்று விடுவாரா என ரசிகர்கள் இப்போது விவாதிக்க தொடங்கியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனிஷா யாதவ் என்னால் தான் சினிமாவை விட்டு போனாங்களா?... பதிலளித்த இயக்குனர் சீனு ராமசாமி!