ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் மஹதீரா.
ராஜமௌலி தன்னுடைய பிரம்மாண்டமான பாகுபலி படங்களுக்கு ஒரு முன்னோட்டமாக மஹதீராவை ராம்சரணை வைத்து இயக்கினார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தமிழில் மாவீரன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு அதுவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் மூலம் கவனம் பெற்ற ராஜமௌலி அடுத்து நான் ஈ, பாகுபலி படங்களை இயக்கிய இந்தியா முழுவதும் பிரபலமான இயக்குனரானார். இப்போது அவர் இயக்கியுள்ள ஆர் ஆர் ஆர் படத்துக்காக இந்தியா முழுவதும் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
இதையடுத்து இப்போது அவரின் பழைய படங்கள் அதிகளவில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மஹதீரா படத்தை இயக்குனர் பிரபுதேவா ரீமேக் செய்ய ஆசைப்பட்டு அது சம்மந்தமாக ராஜமௌலியை அணுகியுள்ளார். ராஜமௌலியும் பிரபுதேவா மேல் உள்ள மரியாதையில் அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக சொல்லப்படுகிறது.