Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 9 January 2025
webdunia
Advertiesment

பிரபுதேவா நடிக்கும் ‘சிங்காநல்லூர் சிக்னல்’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!

பிரபுதேவா நடிக்கும் ‘சிங்காநல்லூர் சிக்னல்’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!

vinoth

, செவ்வாய், 2 ஜூலை 2024 (07:21 IST)
கோலிவிட்டில் நடன அமைப்பாளராக இருந்து, ஹீரோவாக பின்னர் போக்கிரி படம் மூலம் வெற்றிகரமன இயக்குநராக வலம் வந்தவர் பிரபுதேவா. இவர் பாலிவுட் சென்று அங்கும் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார். ஆனால், அவரது சமீபத்தில் படங்கள் வெற்றிபெறவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் அவர் மீண்டும் நடிப்பு பாதைக்குத் திரும்பியுள்ளார். ஆனால் நடிப்பும் அவருக்கு பெரியளவில் கைகொடுக்கவில்லை.

இதையடுத்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து வந்தார். ஆனால் அதில் எந்த படங்களும் பெரிதாக அவருக்கு திருப்புமுனையாக அமையவில்லை. இதனால் அவர் நடிப்பில் ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டார். ஆனாலும் அவர் இந்தியா முழுவதும் தெரிந்த முகம் என்பதால் அவரை வைத்து படமெடுத்தால் எப்படியும் பிஸ்னஸ் செய்துவிடலாம் என தொடர்ந்து படங்கள் எடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் இப்போது அவர் சிங்காநல்லூர் சிக்னல் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் அவர் ஒரு டிராபிக் காவலராக நடிக்கிறார். படத்தை முத்தமிழ் படைப்பகம் தயாரிக்க, கே எம் ராஜா இயக்குகிறார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பஹத் பாசிலோடு இணைந்து நடிக்கும் மாரீசன் படம் பற்றி வடிவேலு தந்த அப்டேட்!