Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பஹத் பாசிலோடு இணைந்து நடிக்கும் மாரீசன் படம் பற்றி வடிவேலு தந்த அப்டேட்!

பஹத் பாசிலோடு இணைந்து நடிக்கும் மாரீசன் படம் பற்றி வடிவேலு தந்த அப்டேட்!

vinoth

, செவ்வாய், 2 ஜூலை 2024 (07:20 IST)
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் என்ற திரைப்படத்தில் பகத் பாஸில் மற்றும் வடிவேலு இணைந்து நடித்தனர் என்பதும் அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.

இதனை அடுத்து மீண்டும் பகத் பாஸில் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும் இந்த படத்தை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் படம் பற்றிய அப்டேட்டை வடிவேலு தந்துள்ளார்.

அதில் “மீண்டும் பஹத்தோடு மாரீசன்னு ஒரு படம் நடிக்கிறேன். இந்த படம் வித்தியாசமான படமா இருக்கும். பெரிய அவார்டெல்லாம் கிடைக்கும். பேமிலி ரசிகர்களும் பெண்களும் ரசிக்கும் விதமாக இந்த படம் இருக்கும்” எனக் கூறியுள்ளார். இந்த படம் ஒரு ரோட் மூவியாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேரடியாக ஹாலிவுட் படத்தில் நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள்!