Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா… ஹீரோயின் இவர்தான்!

மீண்டும் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா… ஹீரோயின் இவர்தான்!
, திங்கள், 27 பிப்ரவரி 2023 (08:21 IST)
இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா மற்றும் பிரபு இணைந்த நடித்த சார்லி சாப்ளின் திரைப்படம் 2002 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் இவர்களோடு அபிராமி, காயத்ரி ரகுராம் என பல நடிகர்கள் நடித்திருந்தனர். ஹிட் படமாக அமைந்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த ஆண்டு உருவாக்கி இருந்தனர். பிரபுதேவா, நிக்கி கல்யாணி ஆகியோர் நடிப்பில் சார்லி சாப்ளின் திரைப்படம் திரைக்கு வந்தது. இந்த படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இப்போது பிரபுதேவா, நடிப்பில் மீண்டும் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஷக்தி சிதம்பரம்.

இந்த படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்பட வில்லை. படத்தில் பிரேமம் புகழ் மடோனா செபாஸ்டியன் கதாநாயகியாக நடிக்க உள்ளார். ஷக்தி சிதம்பரம் இங்கிலிஷ்காரன், மகாநடிகன் உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் பட ஓப்பனிங் காட்சியை ‘லூப்’ மோடில் பார்த்துக் கொண்டிருந்தேன் – ரசிகருக்கு சந்தோஷ் நாராயணன் பதில்