Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாகப் போகும் பிரபு – காம்பினேஷனே வித்தியாசமா இருக்கே!

ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாகப் போகும் பிரபு – காம்பினேஷனே வித்தியாசமா இருக்கே!
, வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (10:48 IST)
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறாராம் ஐஸ்வர்யா ராய்.

மணிரத்னம் தனது கனவுப்படைப்பான பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை இரண்டு கட்டங்களாக நடத்தி முடித்தார். படத்தில் நடிக்கும் கார்த்தி, ஜெயம்ரவி உள்ளிட்ட நடிகர்கள் அதில் கலந்துகொண்டனர். இந்நிலையில் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் பணிகள் பாதியிலேயே நிற்கின்றன.

இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் நடிக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பதாக சமீபத்தில் ஒரு செய்தி இணையத்தில் பரவ ஆரம்பித்துள்ளது.

ஆனால் இந்த செய்தி உண்மை இல்லை என்று இப்போது தெரிய வந்துள்ளது. கதைப்படி நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராயை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்ளும் பெரிய பழுவேட்டரையர் எனும் கதாபாத்திரத்தில் பிரபு நடிக்க உள்ளாராம். மேலும் இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியலில் ரஜினி… பொறுப்புகள் எல்லாம் இப்போது இவர் வசம்தான்!