Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னது அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நடிக்கிறாரா ஐஸ்வர்யா ராய் – பொன்னியின் செல்வன் அப்டேட்!

என்னது அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நடிக்கிறாரா ஐஸ்வர்யா ராய் – பொன்னியின் செல்வன் அப்டேட்!
, புதன், 19 ஆகஸ்ட் 2020 (10:39 IST)
நடிகை ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் தனது கனவுப்படைப்பான பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை இரண்டு கட்டங்களாக நடத்தி முடித்தார். படத்தில் நடிக்கும் கார்த்தி, ஜெயம்ரவி உள்ளிட்ட நடிகர்கள் அதில் கலந்துகொண்டனர். இந்நிலையில் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் பணிகள் பாதியிலேயே நிற்கின்றன.

இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் நடிக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பதாக சமீபத்தில் ஒரு செய்தி இணையத்தில் பரவ ஆரம்பித்துள்ளது. இந்த செய்தி உண்மை இல்லை என்று ஒரு சிலர் சொல்கின்றனர். பார்த்திபனுக்கு ஜோடியாகதான் ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹரி & அருண் விஜய் இணையும் ஆக்‌ஷன் படம் – பட்ஜெட்டைக் கேட்டு ஓடும் தயாரிப்பாளர்கள்!