பிரபுதேவா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்னர் வெளியான படம் சார்லி சாப்ளின் 2. இந்த படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்கி இருந்தார். அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது. சார்லி சாப்ளின் 2 படம் வெளியான போது மோசமான விமர்சனங்களைப் பெற்றது.
இதையடுத்து இப்போது ஷக்தி சிதம்பரம் & பிரபுதேவா கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்தில் மடோனா செபாஸ்டியன், யாஷிகா ஆனந்த், அபிராமி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், மதுசூதனராவ், ரோபோ சங்கர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கான தலைப்பை இப்போது படக்குழு அறிவித்துள்ளது. படத்துக்கு ஜாலியோ ஜிம்கானா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.