Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் இனையும் பிரபுதேவா & ஷக்தி சிதம்பரம் கூட்டணி!

மீண்டும் இனையும் பிரபுதேவா & ஷக்தி சிதம்பரம் கூட்டணி!
, செவ்வாய், 7 நவம்பர் 2023 (10:32 IST)
பிரபுதேவா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்னர் வெளியான படம் சார்லி சாப்ளின் 2. இந்த படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்கி இருந்தார். அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது. சார்லி சாப்ளின் 2 படம் வெளியான போது மோசமான விமர்சனங்களைப் பெற்றது.

இதையடுத்து இப்போது ஷக்தி சிதம்பரம் & பிரபுதேவா கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்தில் மடோனா செபாஸ்டியன், யாஷிகா ஆனந்த், அபிராமி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ஜான் விஜய், ‘ஆடுகளம்’ நரேன், மதுசூதனராவ், ரோபோ சங்கர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கான தலைப்பே மக்களையே வைக்க சொல்லி இயக்குனர் முடிவு செய்துள்ளாராம். விரைவில் இந்த படத்தின் தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி பற்றிய விவரங்கள் வெளியாகும் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கும் சத்யபாமா படத்தின் போஸ்டர் ரிலீஸ்!