Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கே.ஜிஎஃப்-3 படத்தில் யாஷுடன் இணையும் பிரபாஸ்?

Advertiesment
கே.ஜிஎஃப்-3 படத்தில் யாஷுடன் இணையும் பிரபாஸ்?
, வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (22:48 IST)
கன்னட நடிகர் யஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியான படம் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் சாப்ட்டர் 2.  சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ரூ.600 கோடிக்கு மேல் வசூல்சாதனை படைத்துள்ளது.

அடுத்த பாகத்திற்கான லீடும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்ததால் விரைவில் இப்படத்தின் 3 வது சேப்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள முக்கிய மொழிகளில் வெளியாகி பான் இந்தியாப் படமாக சாதனைப்படைத்துள்ளது.

இந்நிலையில் விரைவில் கே.ஜி.எஃப்-2 படத்தின் ஷூட்டிங் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது, கே.ஜி.எஃப் -3 படத்தின் யாஷுடன் இணைந்து பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது, பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் ஷலார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த பின் கேஜி.எப் 3 படம் ஆரம்பிக்கலாம் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலாச்சாரம் என்ற பெயரில் எதையும் மறைக்க வேண்டாம்: பிறந்த நாளில் ஓவியா அட்வைஸ்