Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல நடிகையை காதலிக்கும் பிரபாஸ்....

prabas kritisanon
, திங்கள், 28 நவம்பர் 2022 (17:43 IST)
தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகர்  பிரபாஸ். இவர் பிரபல  நடிகையை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் பிரபாஸ். ராஜமெளலி இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான பாகுபலி1-2 ஆகிய இரண்டு படங்களின் வெற்றி இவரை இந்திய சினிமாவில்  அதிக சம்பளம் பெறும் நடிகராக மாற்றியது.

இவர், தற்போது, ஆதிபுரூஸ்,  பிரசாந்த் நீல்ஸுடன் இணைந்து சலார்  உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில்,  பிரபாஸும்,  பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் ஆகிய இருவரும் இணைந்து ஆதிபுரூஸ்படத்தில் நடித்துவரும் நிலையில், இவர்கள் இருவரும்  காதலித்து வருவதாக தகவல் வெளியானது.

சமீபத்தில், கரண் ஜோகரின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ‘’பேடியா’’ பட ஹீரோ நடிகர் வருண், கீர்த்தி சனோன்- பிரபாஸை காதலித்து வருவதாகக் கூறினார்.

எனவே, பிரபாஸும் விரைவில் தன் காதலை உலகிற்கு அறிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பேடியா படத்தின் வருணுக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்திருந்தார். இப்படம் சமீபத்தில் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் ஹீரோ இல்லை, 4 காட்சிகளில் தான் நடித்துள்ளேன்: ’தாதா’ படம் குறித்து யோகிபாபு