Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் ஹீரோ இல்லை, 4 காட்சிகளில் தான் நடித்துள்ளேன்: ’தாதா’ படம் குறித்து யோகிபாபு

Yogibabu
, திங்கள், 28 நவம்பர் 2022 (17:00 IST)
யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்த ’தாதா’ என்ற திரைப்படம் டிசம்பர் 9ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த படத்தில் தான் ஹீரோ இல்லை என்றும் நான்கே நான்கு காட்சிகளில் மட்டும்தான் நடித்து உள்ளேன் என்றும் யோகிபாபு தெரிவித்துள்ளார்
 
யோகி பாபு நடிப்பில் உருவான ’தாதா’ என்ற திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் இன்று வெளியாகும் என்றும் இந்த படம் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்
 
கின்னஸ் கிஷோர் என்பவர் எழுதி எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு தான் ஹீரோ என்று விளம்பரப்படுத்தி உள்ள நிலையில் சற்று முன் யோகிபாபு இது குறித்து விளக்கமளித்துள்ளார் 
 
’தாதா’ திரைப்படத்தில் நான் ஹீரோ இல்லை என்றும் ஹீரோவாக நடித்துள்ள நிதின் சத்யாவுக்கு நண்பர் கேரக்டரில் நடித்துள்ளேன் என்றும் நான் ஹீரோ என்று விளம்பரப் படுத்தப்படுவதை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.  
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புஷ்பா1 ரஸ்யாவில் எப்போது ரிலீஸ்? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு