Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
, ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (09:39 IST)
பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பாகுபலி மற்றும் பாகுபலி 2 உள்பட பல திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடித்து வரும் படங்களில் ஒன்று ராதே ஷ்யாம். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள படக்குழுவினர் அதில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 30 என அறிவித்துள்ளனர். இதனை அடுத்து பிரபாஸ் ரசிகர்கள் குஷியில் உள்ளனர் 
 
இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த ஆண்டின் வெற்றிப் படங்களில் ஒன்றாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபாஸுடன் பூஜா ஹெக்டே முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை ராதா கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை யூவி கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உயிரே உறவே தமிழே...கமல்ஹாசன் பிரமாண்ட மாநாட்டுக்கு அழைப்பு !!