பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருதாணி என்ற சீரியல் மூலம் நடிப்பை தொடங்கிய நேத்ரன், அதன் பிறகு சூப்பர் குடும்பம், முள்ளும் மலரும், வள்ளி, சதிலீலாவதி, உறவுகள் சங்கமம், பாவம் கணேசன் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் நேத்ரனுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஆறு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அவரது மறைவு சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்திரை உலகில் பிரபல நடிகராக வலம் வந்த நேத்ரனின் இடத்தை நிரப்ப முடியாது என சின்னத்திரை நட்சத்திரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அவரது உடல் அஞ்சலிக்காக அனைவருக்கும் வைக்கப்பட்டிருப்பதாகவும், இறுதி சடங்கு இன்று நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.