Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குத்துப் பாட்டு என்றாலே உற்சாகம்தான்… கூலி படத்தில் நடனமாடியது ஏன்? – பூஜா ஹெக்டே பதில்!

vinoth
வியாழன், 7 ஆகஸ்ட் 2025 (10:33 IST)
ஜெயிலர் மற்றும் வேட்டையன் ஆகிய ஹிட் படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தில் இருந்து இரண்டாவது தனிப்பாடலாக ‘மோனிகா’ என்ற பாடல் வெளியானது. இந்த பாடலில் சிறப்புத் தோற்றத்தில் பூஜா ஹெக்டே கவரச்சி நடனமாடியுள்ளார். இந்த பாடலில் அவரின் நடனம், கவர்ச்சி உடை ஆகியவைக் கவனத்தை ஈர்த்துள்ளன. ஆனால் முன்னணிக் கதாநாயகியாக இருக்கும் பூஜா ஹெக்டே ஏன் மற்றொரு படத்தில் குத்துப் பாடலுக்கு நடனமாட வேண்டும் என்ற கேள்வியும் விமர்சனங்களும் வைக்கப்பட்டன.

இது குறித்து பதிலளித்துள்ள பூஜா “குத்துப் பாடல் என்றாலே எனக்கு உற்சாகம் பிறந்துவிடும். அதுபோன்ற பாடல்களில் நடனமாடுவது எனக்கு மிகவும் பிடிக்கிறது.  பாலிவுட் படங்கள் போல தற்போது தென்னிந்திய சினிமாவிலும் குத்துப் பாடல்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.” எனக் கூறியுள்ளார். பூஜா இப்படி  பல காரணங்கள் சொன்னாலும் இந்த பாடலுக்கு நடனமாட அவருக்கு 2 கோடி ரூபாய் சம்பளமாகக் கொடுக்கப்பட்டதுதான் அவர் இதற்கு ஒத்துக்கொண்டதற்கு முதன்மையான காரணம் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குத்துப் பாட்டு என்றாலே உற்சாகம்தான்… கூலி படத்தில் நடனமாடியது ஏன்? – பூஜா ஹெக்டே பதில்!

பணத்திற்காக ஆபாச படங்களில்..? இப்போ தலைவர் பதவிக்கு ஆசையா? - நடிகை ஸ்வேதா மேனன் மீது பகீர் புகார்!

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படம் தொடங்குவதில் மீண்டும் தாமதம்… பின்னணி என்ன?

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா?... எந்த படத்தில் தெரியுமா?

கூலி படம் 1000 கோடி ரூபாய் வசூலிக்காது… தயாரிப்பாளர் தனஞ்செயன் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்