தனுஷின் அடுத்த படத்தில் நடந்த அதிரடி மாற்றம்… கடைசி நேரத்தில் மாறிய ஹீரோயின்!

vinoth
சனி, 5 ஜூலை 2025 (08:30 IST)
அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து விக்னேஷ் ராஜா இயக்கிய திரைப்படம் போர்த் தொழில். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. திரையரங்குகள் மூலமாக மட்டும் 50 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டியது.

இதையடுத்து கவனிக்கப்படும் இயக்குனராக உருவான விக்னேஷ் ராஜா அடுத்து தனுஷை வைத்து ஒரு படம் இயக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஒப்பந்தம் ஆனது. இந்த படம் கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டும் தொடங்குவதில் தாமதம் ஆனது. ஒருவழியாக இப்போது ஜூலையில் ஷூட்டிங் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க மமிதா பைஜு ஒப்பந்தம் ஆனதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது அவருக்குப் பதிலாக பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் க்யூட் பிக்ஸ்…!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

அருந்ததி ரீமேக் பணிகள் தொடங்குவது எப்போது?... மோகன் ராஜா அப்டேட்!

என் மகனுக்கு நான் சொன்ன அட்வைஸ் இதுதான்… கருணாஸ் ஓபன் டாக்!

மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனரோடு கூட்டணியா?... சூர்யா எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments