Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

Siva
சனி, 22 மார்ச் 2025 (19:11 IST)
பிரபல நடிகை பூஜா ஹெக்டே விமானத்தில் தனது செல்போனை தவறவிட்டதாகவும், அதை தேடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை நடிகர் வருண் தவான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதோடு, அது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
 
தமிழில் ‘முகமூடி’ படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, அதன் பின்னர் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக மாறினார். விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் மூலம் தமிழில் மீண்டும் வந்த அவர், தற்போது விஜய்யுடன் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ உட்பட சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் அவர் நடித்து வருகின்றார்.
 
சமீபத்தில் நடிகர் வருண் தவானுடன் பயணித்தபோது, பூஜா ஹெக்டே விமானத்தில் தனது செல்போனை காணாமல் விட்டுவிட்டார். அதை தேடுவதற்காக விமானத்திற்குள் பரபரப்பாக அங்கும் இங்கும் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. இதை வேடிக்கையாக வீடியோ எடுத்த வருண் தவான் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ய அதன்பின்னர் அவரே செல்போனை தேடி கண்டுபிடித்து கொடுத்தார். செல்போன் கிடைத்துவிட்டதால் உங்களை மன்னித்தேன் என்று பூஜா சொல்லும் காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

எம்புரான் அந்த மாதிரி பிரம்மாண்ட பட்ஜெட் படம் இல்லை… இயக்குனர் பிரித்விராஜ்!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் அடுத்த சிங்கிள் ரிலீஸ் அப்டேட்…!

தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ஆரம்பக்கட்டத்தில்தான் உள்ளது- தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments