கும்பமேளாவுக்கு புனித நீராட சென்ற பெண் ஒருவர், தனது கணவரை வீடியோ காலில் அழைத்து, அந்த செல்போனை நேரில் மூழ்கடித்து கணவருக்கு புனித நீராடல் செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜி நகரில் மகா கும்பமேளா நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது.
இந்த நிலையில், நேற்று கும்பமேளாவில் புனித நீராட வந்த பெண் ஒருவர், தனது கணவருடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, தனது செல்போனை நேரில் மூழ்கடித்து, டிஜிட்டல் புனித நீராட்டை கணவருக்கு செய்துள்ளார்.
இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த அந்த பெண், கணவர் உருவம் இருக்கும் செல்போனை மூன்று முறை நீரில் மூழ்கடித்து, தனது கணவரும் புனித குளியல் நடத்தி விட்டதாக கூறியுள்ளார்.
இது போன்ற செயல்களால் புனித நீராடல் என்பதே கேலிக்குரியதாகி வருகிறது என்றும், இந்த உலகத்தில் முட்டாள்களுக்கு பஞ்சமில்லை என்பதும் உறுதியாகிறது என்றும் பலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.