Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் 69 படத்தில் இவர்தான் கதாநாயகியா?... வெளியான தகவல்!

விஜய் 69 படத்தில் இவர்தான் கதாநாயகியா?... வெளியான தகவல்!

vinoth

, சனி, 14 செப்டம்பர் 2024 (13:53 IST)
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’  உருவான கோட் திரைப்படம் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.   படம் இதுவரை 300 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கோட் படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

ஷூட்டிங் அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக சொல்லப்படும் நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அவர், விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்..!