Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னியின் செல்வன் அடுத்த சிங்கிள் பாடல்: நாளை ரிலீஸ்!

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (19:08 IST)
பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் வரும் 30-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை படக்குழுவினர் நாடு முழுவதும் சுற்றி புரோமோஷன் செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். 
 
 இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில் நாளை தேவராளன் என்ற மற்றொரு சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் புரோமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எது நடந்ததோ அது….. நன்றாகவேவா? நடந்தது.. கரூர் சம்பவம் குறித்து இயக்குனர் பார்த்திபன்..

நீங்க அரசியலுக்கு செட்டாக மாட்டீங்கன்னு விஜய்கிட்ட சொன்னேன்! - சர்கார் பட நடிகர் பதிவு!

கேஷ்வல் உடையில் ஹாட் போஸில் அசத்தும் பூனம் பாஜ்வா!

மாளவிகா மோகானின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சூட்டோடு சூடாக வெளியானது ‘லோகா 2’ அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments