Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி இதுதான்… வெளியான தகவல்!

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி இதுதான்… வெளியான தகவல்!
, சனி, 5 நவம்பர் 2022 (18:13 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப்படைப்பான பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்போது வரை படம் சில திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில், இதுவரை 450 கோடி ரூபாய்க்கும் மேல் வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து இன்று சென்னையில் படத்தின் வெற்றி விழா நடந்துள்ளது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டுள்ள நிலையில், இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 28 ஆம் தேதி என இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரொம்ப நாள் கழிச்சு படம் பாக்க வந்தவங்களுக்கு நன்றி… பொன்னியின் செல்வன் வெற்றி விழாவில் விக்ரம்!