Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ஆடியோ லான்ச் எப்போது? வெளியான தகவல்!

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ஆடியோ லான்ச் எப்போது? வெளியான தகவல்!
, திங்கள், 27 பிப்ரவரி 2023 (15:37 IST)
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில் இப்போது படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடந்துவரும் நிலையில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மார்ச் 29 ஆம் தேதி இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்க உள்ளதாக சொலல்ப்படுகிறது. மேலும் இரண்டாம் பாகத்தில் மூன்று பாடல்கள் மட்டுமே இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல தொழிலதிபரின் பயோபிக்.. சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறாரா பிருத்விராஜ்?