Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சோழர்களோடு மோதும் பாண்டியர்கள்! – பொன்னியின் செல்வன், யாத்திசை ஒரே நாளில் ரிலீஸ்!

Yaathisai
, வியாழன், 6 ஏப்ரல் 2023 (14:37 IST)
பாண்டியர்களின் வரலாற்று படமான யாத்திசையும், சோழர்கள் வரலாற்று படமான பொன்னியின் செல்வனும் ஒரே நாளில் வெளியாவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்திக், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட திரையுலக பிரபல நடிகர்கள் நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் ‘பொன்னியின் செல்வன் 1’. கல்கி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் வசூலில் பல சாதனைகளை படைத்தது.

இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன் 2’ இந்த மாதம் 28ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையே சோழர்கள் வரலாற்று படம் போல பாண்டியர்களின் வரலாற்றை மையப்படுத்தி ‘யாத்திசை’ என்ற படம் வெளியாக உள்ளது.

புதிய இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் பா.ரஞ்சித், மோகன் ஜி, அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட பல பிரபலங்களால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த யாத்திசை படம் ‘பொ.செ-2’ க்கு முன்னதாக ஏப்ரல் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் யாத்திசை வெளியாகும் அதே 21ம் தேதி பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சோழர்களின் வரலாற்றை சொல்லும் பொன்னியின் செல்வனும், பாண்டியர்களின் வரலாற்றை சொல்லும் யாத்திசையும் ஒரே நாளில் வெளியாகும் நிலையில் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனது அடுத்த படத்தை தமிழில் இயக்கும் அல்போன்ஸ் புத்ரன்… ஹீரோ இவரா?