Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொன்னியின் செல்வனுக்கு U/A!! ரன்னிங் டைம் தெரியுமா??

பொன்னியின் செல்வனுக்கு U/A!! ரன்னிங் டைம் தெரியுமா??
, சனி, 24 செப்டம்பர் 2022 (08:51 IST)
பொன்னியின் செல்வன் வெளியீட்டிற்கு ஒருவார காலமே உள்ள நிலையில் படத்திற்கான தணிக்கை சான்றிதழ் வெளியாகியுள்ளது.


பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் வரும் 30-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை படக்குழுவினர் நாடு முழுவதும் சுற்றி புரோமோஷன் செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

இயக்குனர் மணிரத்தினத்தின் கனவுப்படமான இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் பட வெளியீட்டிற்கு இன்னும் ஒருவார காலமே உள்ள நிலையில் படத்திற்கான தணிக்கை சான்றிதழ் வெளியாகியுள்ளது.

சுமார் 2 மணி நேரம் 47 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் பொன்னியின் செல்வன் படம் படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல ஓடிடியில் விக்ரம் நடித்த கோப்ரா ரிலீஸ்… தேதி அறிவிப்பு!