Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடப்பாவிகளா இதெல்லாம் ஒரு கேள்வியா ? –ராதிகா மேல் கடுப்பான நெட்டிசன்கள் !

Advertiesment
அடப்பாவிகளா இதெல்லாம் ஒரு கேள்வியா ? –ராதிகா மேல் கடுப்பான நெட்டிசன்கள் !
, செவ்வாய், 14 ஜனவரி 2020 (12:28 IST)
கலர்ஸ் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் கோடிஸ்வரி நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகள் மிகவும் முட்டாள் தனமாக இருப்பதாக் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் தொலைக்காட்சியில் ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்கள் அடிக்கடி சொல்லும் குற்றச்சாட்டாக போட்டியாளர்களிடம் கேட்கப்படும் கேள்விகள் மிகவும் முட்டாள் தனமாகவும் எளிதாகவும் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் இதுபோன்ற முட்டாள்தனமான கேள்வி கேட்பது பார்வையாளர்களை ஏமாற்றும் விதமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
webdunia

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் சரத்குமாரிடம் ராதிகா கேட்கும் கேள்வி ஒன்று அதை உண்மை என நம்பும் விதமாக அமைந்துள்ளது. அந்த கேள்வி என்னவென்றால் நாட்டாமை திரைப்படத்தில் இடம்பெறும்  புகழ்பெற்ற வசனமான பசுபதி எடுறா வண்டிய ?  என்பதில்…. பசுபதி என்ற பெயருக்கு பதில் கோடிட்டு அந்த இடத்தை சரத்குமாரை நிரப்ப சொல்கிறார். இவ்வளவு எளிதான கேள்விக்கு அவருக்கு பதில் தெரியாதா ? என நெட்டிசன்கள் பொங்க ஆரம்பித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபிகாவைக் கைவிடும் விளம்பர நிறுவனங்கள் – சாதனையில் இருந்து சோதனை !