Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''வலிமை'' குறித்து அஜித் ரசிகர்கள் ஒட்டிய அரசியல் போஸ்டர் வைரல்

Advertiesment
''வலிமை'' குறித்து அஜித் ரசிகர்கள் ஒட்டிய அரசியல் போஸ்டர் வைரல்
, செவ்வாய், 4 ஜனவரி 2022 (16:40 IST)
மதுரை மாவட்ட அஜித் ரசிகர்கள் வலிமை படம் குறித்து அரசியல் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களாக அஜித் ரசிகர்களால் தீவிரமாக எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி பெரும் ட்ரெண்டாகி வருகிறது.

வலிமை பொங்கலுக்கு வெளியாவதாக போனிகபூர் அறிவித்திருந்தார். தற்போது ஒமிக்ரான் பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக தமிழகத்தில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கே அனுமதி உள்ளது. நாட்டின் பிற மாநிலங்களிலும் பல்வேறு தடைகள் இருப்பதால் பெரிய பட்ஜெட் படங்கள் தங்கள் ரிலீஸை ஒத்தி வைத்துள்ளன.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்  போனிகபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வலிமை படம் வரும் 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் எனவும் இப்படத்தின் அனுபவத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பெறுங்க்கள் என எனத் தெரிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

இந்நிலையில்,  மதுரை மாவட்ட அஜித் ரசிகர்கள் வலிமை படம் குறித்து அரசியல் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
webdunia

அதில், வலிமை பட்டிதொட்டிக்கும் தெரியுமாம் சட்டசபையும் அறியுமாம் எனத் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே அரசியல் வேண்டாம் எனவும், தல என்ற பெயர் வேண்டாம் என நடிகர் அஜித் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ்: மூன்று லட்ச ரூபாய் பெட்டியை எடுப்பது நிரூப்பா?