Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சவுண்ட் விட்ட விஜய் ரசிகருக்கு ஆப்பு... ஜல்லடை போட்டு தேடும் போலீஸார்

Advertiesment
சவுண்ட் விட்ட விஜய் ரசிகருக்கு ஆப்பு... ஜல்லடை போட்டு தேடும் போலீஸார்
, திங்கள், 12 நவம்பர் 2018 (18:02 IST)
விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில் இருந்த சில வசனங்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதனால், அதிமுகனர் ஆர்ப்பாட்டம் நடத்திய போது விஜய் ரசிகர்கள் ஆசை ஆசையாய் வைத்த பேனர்கள் கிழித்து போடப்பட்டன. 

 
அப்போது விஜய் ரசிகர் ஒருவர் வெளியிட்ட வீடியோவை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். அந்த வீடியோவில், நீங்க நல்லது பண்ணியிருந்தா நல்லதா படம் எடுத்திருப்பாங்க. நீங்க கெட்டது தாண்டா பண்ணியிருக்கிங்க. 
 
நாங்க இல்லாத நேரமா பார்த்து பேனரை கிழிச்சு போட்டிருக்கிங்க. நாளை காசி தியேட்டர்ல மறுபடியும் பேனர் வைக்கிறேன். எவனாவது  காசி தியேட்டர் கிட்ட வாங்கடா! அப்படி வந்தீங்கன்னா நாங்க பேச மாட்டோம், எங்க அருவாதான் பேசும். 
 
நாங்க தளபதி ரசிகர்கள் ஒண்ணு சேர்ந்த ஒரு அதிமுககாரன் உயிரோட இருக்க மாட்டிங்க. உங்களை ஏதாவது செஞ்சிட்டா, தளபதிக்கு கெட்ட பெயர் வந்துரும்ன்னு அமைதியா இருக்கோம் என்று பொங்கியிருந்தனர். 
 
இப்போது இவர்களை போலீஸார் ஜல்லடை போட்டு தேடி வருகின்றனர். ஆம், இருவர் மீதும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த நபர்களை பற்றிய விவரங்கள் தெரிந்தவர்கள், சென்னை மத்திய குற்றப்பிரிவு கணினி வழி குற்றப்பிரிவில், 044-23452348 அல்லது 044-23452350 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யை எதிர்த்து அஜித்திற்கு ஆதரவு கொடுத்த தமிழக அமைச்சர்கள்