மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிசாசு 2. 2014-ம் ஆண்டு வெளியான பிசாசு படத்துக்கும் இந்த படத்துக்கும் திரில்லர் என்பதைத் தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை என்று மிஷ்கின் கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022 ஆம் ஆண்டே முடிவடைந்த நிலையில் இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் படம் ரிலீஸாகவில்லை.
2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட படம் தயாரிப்பாளரின் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக ரிலீஸாகவில்லை. இந்நிலையில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ரிலீஸாகாமல் முடங்கிக் கிடக்கும் பிசாசு 2 படத்தை தற்போது ரிலீஸ் செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மார்ச் மாதத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மிஷ்கின் இயக்கியுள்ள மற்றொரு படமான ட்ரெய்ன் படத்தையும் அதே மார்ச் மாதத்தில் ரிலீஸ் செய்யதான் தயாரிப்பாளர் தாணு முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த இரண்டு படங்களிலும் விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.