Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 பட ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 பட ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
, வெள்ளி, 14 அக்டோபர் 2022 (16:05 IST)
இயக்குனர் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 திரைப்படம் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

மிஷ்கின்  இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிசாசு 2’ .இந்த படம் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முதல்பாகத்தும் இரண்டாம் பாகத்துக்கும் திரில்லர் என்பதைத் தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை என்று இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் ரிலீஸானது.

இந்த படத்தில் சுமார் 20 நிமிடக் காட்சிகளில ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்திருப்பதாக படக்குழு அறிவித்திருந்தனர். ஆனால் சமீபத்தில் அந்த காட்சிகளை எல்லாம் நீக்கிவிட்டதாக இயக்குனர் மிஷ்கின் அறிவித்து இருந்தார். இது சம்மந்தமாக ஆங்கில ஊடகத்துக்கு அளித்துள்ள நேர்காணலில் “இப்போது நாங்கள் அந்த காட்சிகளை நீக்கிவிட்டோம். ஏனென்றால் இது ஒரு தாய்க்கும் அவளது மகளுக்கும் இடையிலான கதை. இப்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு அந்த படத்தைப் பார்க்கலாம்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த தேதியில் ரிலீஸ் ஆகவில்லை. மேலும் மறு ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இப்போது இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில்தான் ரிலீஸ் ஆகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணனின் படத்தில் இணைந்த பிரேம்ஜி அமரன்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!