Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகாலையில் வெளியான மிஷ்கினின் அடுத்த பட அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (07:58 IST)
பிரபல இயக்குனர் மிஷ்கின் தனது அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று அதிகாலை 12 மணிக்கு வெளியிட போவதாக தெரிவித்திருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்று அதிகாலை மிகச் சரியாக 12 மணியளவில் தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மிஷ்கின் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்
 
மிஷ்கினின் அடுத்த படம் ’பிசாசு 2’ என்பதும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகை ஆண்ட்ரியா நடிக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இந்த படத்தின் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி ஆகிறார். இந்த படத்திற்கு அவர் இசையமைப்பாளர் என்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் மிக விரைவில் தொடங்கவுள்ளது. மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் மிஷ்கின் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
 
மிஷ்கினின் அடுத்த படத்தில் சிம்பு, அருண்விஜய் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் அவரது சூப்பர்ஹிட் படமான ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகமே அவரது அடுத்த படமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குரிப்பிடத்தக்கது
அதிகாலையில் வெளியான மிஷ்கினின் அடுத்த பட அறிவிப்பு!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா தமிழ்செல்வி? பரபரக்கும் திருப்பங்களுடன் சின்ன மருமகள் நெடுந்தொடர்!

‘ஆண்பாவம்’ புகழ் பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

மாமன் படத்துக்கு வெற்றி விழா கிடையாது… நடிகர் சூரி சொல்லும் காரணம்!

‘புல்லரிக்குது தம்பி. என் அப்பா ஞாபகம் வந்துடுச்சு’.. டூரிஸ்ட் பேமிலி இயக்குனரைப் பாராட்டிய ஆட்டோ ஓட்டுனர்!

இயற்கை சீற்றத்துக்கு மத்தியில் ‘மதராஸி’ படத்தின் ஷூட்டிங்கை முடித்த முருகதாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments