Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆல் இன் ஆலாக விஜய் ஆண்டனி… பிச்சைக்காரன் 2 படத்தின் முக்கிய அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 16 அக்டோபர் 2022 (09:44 IST)
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வளர்ந்து வந்த காலத்தில் திடீரென நடிகர் அவதாரம் எடுத்தார் விஜய் ஆண்டனி. அவர் நடித்த நான், சலீம் ஆகிய படங்கள் சிறப்பாக ஓடியதால் வரிசையாக படங்களில் நடித்தார். 2016 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் அவரை கமர்ச்சியல் கதாநாயகனாக மாற்றியது. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் அந்த படம் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது.

அதன் பின் அவர் நடித்த படங்கள் வரிசையாக தோல்வி அடைய, தற்போது நான்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா லாக் டவுனில் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை எழுதி முடித்தார். மேலும் அந்த படத்தில் அவர் வசனம், திரைக்கதை, எடிட்டிங், இயக்கம் மற்றும் தயாரிப்பு என ஏகப்பட்ட பொறுப்புகளை ஏற்றுள்ளார்.

இந்நிலையில் இப்போது பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments