Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வளையம் வளையமாக புகைவிடும் அமலா பால் – வைரலான புகைப்படம்!

வளையம் வளையமாக புகைவிடும் அமலா பால் – வைரலான புகைப்படம்!
, சனி, 15 ஆகஸ்ட் 2020 (16:24 IST)
நடிகை அமலாபால் கையில் சிகரெட்டுடன் வளையம் வளையமாக புகைவிடும் புகைப்படம் இப்போது வைரல் ஆகிவருகிறது.

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துள்ளது.

இதையடுத்து இப்போது இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறார். இந்நிலையில் இப்போது இருட்டில் நின்றுகொண்டு கையில் சிகரெட்டுடன் வட்ட வட்டமாக புகைவிட்டுக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் இப்போது வைரலாக பரவ ஆரம்பித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லோகேஷின் தெலுங்கு படத்தின் ஹீரோ இவர்தான் – தமிழ் ஹீரோக்கள் அப்செட்!