Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிகாந்த் செய்ய வேண்டாம் என்று சொன்னதை செய்துவிட்டோம்: இயக்குனர் பேரரசு

Webdunia
வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (16:29 IST)
நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம் உள்பட திரைப்பட தொழிலாளிகள் அனைவருக்கும் 24 டன்கள் மளிகை பொருட்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கொடுத்து உதவியுள்ளார். இந்த பொருட்கள் நாளை முதல் நலிந்த தொழிலாளர்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளன. ரஜினியின் இந்த உதவிக்கு அனைத்து தரப்பு திரையுலக தொழிலாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில் ரஜினிகாந்த் இந்த உதவியை செய்வதற்கு முன்னரே இந்த உதவி குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் குறிப்பாக பத்திரிகைகளுக்கு தெரிவிக்க வேண்டாம் என்றும் கூறியிருந்தார். ஆனால் ரஜினியின் வேண்டுகோளை மீறி நேற்று இயக்குனர் சங்கத்தினர் ரஜினியின் இந்த உதவிக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறியிருந்தனர்.
 
இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் சங்க பொருளாளர் பேரரசு தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ரஜினி சாரின் கட்டளையை மீறிவிட்டோம்! இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசிமூட்டை,மளிகைப் பொருட்கள் வழங்கும் போது "பத்திரிகைகளை அழைக்கவோ, செய்தி கொடுக்கவோ வேண்டாம் "என்ற நிபந்தனையோடுதான் கொடுத்தார். அது அவரின் பெருந்தன்மையாக இருக்கலாம். பெற்ற உதவியை நாங்கள் எப்படி சொல்லாதிருப்பது!’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் புருஷனை சந்தானம் அப்படி பேசினது பிடிக்கல! - தேவயானிக்கு சந்தானம் அளித்த பதில்!

சந்தானம் படத்தில் சர்ச்சை பாடல்.. ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாஜக நிர்வாகி நோட்டீஸ்..!

அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி! முகத்துக்கு நேராக சொன்ன பார்த்திபன்! - சுஹாசினி கொடுத்த ’நச்’ பதில்!

பெருமாள் பாட்டை என்ன பண்ணிருக்காங்க பாருங்க! சந்தானம் மீது எடப்பாடியாரிடம் புகாரளித்த ஜன சேனா!

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments