Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐடி நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் - முதல்வர் டுவீட்

ஐடி நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்  - முதல்வர் டுவீட்
, வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (15:43 IST)
இந்திய அளவில் கொரோனா பாதிப்பு மொத்தமாக 23,073 ஆக உள்ளது. 4,749 பேர் குணமடைந்துள்ள நிலையில் 718 பேர் உயிரிழந்துள்ளனர்.

த;லைநகர் டெல்லியில் 2,376 பேரும், குஜராத்தில் 2,624 பேரும், ராஜஸ்தானில் 1,734 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,659 ஆக உள்ளது. தமிழகம் 1,683 பாதிப்பு எண்ணிக்கையுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், வரும் மே 3 ஆம் தேதிவரை  ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில்.   சற்றுமுன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை, கோவை, மதுரை மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 29 இரவு வரையும், சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 28 இரவு வரைமுழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். 

கொரோனா பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

இதையடுத்து, தமிழக முதல்வர் தனது  டுவிட்டர் பக்கத்தில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம். பிற தனியார் நிறுவனங்கள் செயல்படாது என பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இவன தூக்கி கொரோனா ஆம்புலன்ஸ்ல போடுங்க! – இளைஞர்களை டரியல் செய்த போலீஸ்! #WebViral