நடிகர் பவன் கல்யாண் கஜினி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க மறுத்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய கஜினி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் முதலில் அஜித் நடிப்பதாக இருந்து பின்னர் அதிலிருந்து வெளியேறினார். கஜினி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முயற்சி செய்தார் முருகதாஸ். அந்த படத்தில் நடிப்பதற்காக பவர் ஸ்டார் பவன் கல்யாணிடம் பேச்சுவார்த்தையும் நடந்தது.
ஆனால் படத்தில் கஜினியின் கெட்டப்பிற்காக மொட்டை அடிக்கவேண்டும் என்கிற காரணத்தால் அந்த படத்தை வேண்டாம் என சொல்லியுள்ளார் பவன் கல்யாண். அதன் பிறகு பாலிவுட்டுக்கு போய் அமீர்கானை வைத்து அந்த படத்தை இயக்கினார் முருகதாஸ்.