Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஒரு ரிலீஸ் தேதியை அறிவித்த பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீர மல்லு’ படக்குழு!

vinoth
சனி, 21 ஜூன் 2025 (11:19 IST)
தெலுங்கு சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவரான பவன் கல்யாண், தனது சினிமா கேரியரில் முதன்முறையாக 'ஹரி ஹர வீர மல்லு' என்ற பீரியட் ஆக்‌ஷன் அட்வென்ச்சர் கதையில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தனது புகழ்பெற்ற மெகா சூர்யா புரொடக்ஷன்ஸ் மூலம் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்து இப்போது ரிலீஸை நெருங்கியுள்ளது.

17-ஆம் நூற்றாண்டில் நடக்கும் ஆக்‌ஷன் அட்வென்சர் கதை என்பதால் அதற்கேற்றவாறு சார்மினார், செங்கோட்டை மற்றும் மச்சிலிப்பட்டினம் துறைமுகம் போன்ற பிரம்மாண்டமான செட்களை அமைத்துப் படமாக்கியுள்ளனர். இந்த படத்தில் பாபி தியோல் வில்லனாக நடிக்க, சத்யராஜ் மற்றும் நிதி அகர்வால் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது. கடைசியாக ஜூன் 12 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு விளம்பரப் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால் இறுதிகட்ட பணிகள் முடியாததால் அந்த தேதியிலும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் தற்போது புதிய ரிலீஸ் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. ஜூலை 24 அம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடிக்கும் ‘கிஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

முழுமதுமாகக் குணமடைந்த மம்மூட்டி.. மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார்!

'கூலி’ படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழ்.. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

அன்றலர்ந்த மலர் போல அள்ளும் அழகில் க்யூட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

அடுத்த கட்டுரையில்
Show comments