Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் தள்ளிப் போகிறதா பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீரமல்லு’ திரைப்படம்?

Advertiesment
Pawan Kalyan

vinoth

, வியாழன், 5 ஜூன் 2025 (11:30 IST)
தெலுங்கு சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவரான பவன் கல்யாண், தனது சினிமா கேரியரில் முதன்முறையாக 'ஹரி ஹர வீர மல்லு' என்ற பீரியட் ஆக்‌ஷன் அட்வென்ச்சர் கதையில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தனது புகழ்பெற்ற மெகா சூர்யா புரொடக்ஷன்ஸ் மூலம் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்து இப்போது ரிலீஸை நெருங்கியுள்ளது.

17-ஆம் நூற்றாண்டில் நடக்கும் ஆக்‌ஷன் அட்வென்சர் கதை என்பதால் அதற்கேற்றவாறு சார்மினார், செங்கோட்டை மற்றும் மச்சிலிப்பட்டினம் துறைமுகம் போன்ற பிரம்மாண்டமான செட்களை அமைத்துப் படமாக்கியுள்ளனர். இந்த படத்தில் பாபி தியோல் வில்லனாக நடிக்க, சத்யராஜ் மற்றும் நிதி அகர்வால் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது. கடைசியாக ஜூன் 12 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு விளம்பரப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இப்போது கிராஃபிக்ஸ் பணிகள் முடியாத காரணத்தால் மீண்டும் ரிலீஸ் தேதி மாற்றப்படலாம் என சொல்லப்படுகிறது. ஜூன் 27 ஆம் தேதி அல்லது ஜூலை 4 ஆம் தேதி ரிலீஸாகலாம் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சின்மயி வெர்ஷனா?.. தீ வெர்ஷனா?... அடிச்சிகிட்ட ரசிகர்கள் – மணி சார் வைத்த ட்விஸ்ட்!